பக்கங்கள்

பக்கங்கள்

9 ஏப்., 2016

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஜேர்மன் அரசு பூரண ஆதரவு

கடந்த  சில தசாப்தங்களாக ஜேர்மன் அரசாங்கம் இலங்கையின் அபிவிருத்திக்காக செய்து வரும் அளப்பெரிய பங்கிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்திருக்கிறார்.

ஒரு நாட்டுடன் பேணப்படும் தொடர்பு இன்னுமொரு நாட்டிற்கு அதிருப்தி தராத வகையில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை தயாரிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு மேலும் தெரிவித்துள்ளார். 

ஜேர்மன் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சிலரை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு தமது அரசின் பூரண ஆதரவு என்றும் இருக்குமென ஜேர்மன் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.