பக்கங்கள்

பக்கங்கள்

29 ஏப்., 2016

ஜெர்மனி சர்வதேச டென்னிஸ்: இறுதி ஆட்டத்தில் சானியா ஜோடி தோல்வி

ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் கிராண்ட்பிரி சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில்
ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், சக நாட்டவரான லாரா சிஜிமன்ட்டை 6–4, 6–0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டில் கெர்பர் வென்ற 2–வது பட்டம் இதுவாகும்.
இரட்டையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ கூட்டணியான இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இவர்கள் 6–2, 1–6, 6–10 என்ற செட் கணக்கில் 1 மணி 21 நிமிடம் போராடி பிரான்சின் கரோலினா கார்சியா– மிலாடெனோவிச் ஜோடியிடம் வீழ்ந்தனர்.