பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2016

வடமாகாண சபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவு நாளை சம்பந்தனின் கையில்!

வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வு திட்ட முன்மொழிவுகள் நாளை மாலை 4 மணிக்கு தமிழ்தே சிய
கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தனிடம் கையளிக்கப்படவுள்ளது.
இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பு ம றுசீரமைப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் வடமாகாண மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களும் இடம்பெறும் வகையில்,
வடமாகாண சபையினால் 19 பேர் கொ ண்ட குழு உருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் வரலாற்றின் அடிப்படையில் அரசியல் தீர்வு திட்ட முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு கடந்த 22 ம் திக தி மாகாண சபையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த தீர்வு திட்ட முன்மொழிவுகள் நேற் றய தினம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவின் தலைவரிடம் கையளிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாளை மாலை 4 மணிக்கு யாழ்.பொதுநூலை கேட்போர் கூடத்தில் வைத்து மாகாணசபை உறுப்பினர்கள் 38 பேரும் இணைந்து இந்த முன்மொழிவுகளை கையளிக்கவுள்ளனர்.