பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2016

கைக்குண்டுடன் தேசிய அடையாள அட்டையும் மீட்பு வவுனியாவில் பரபரப்பு

vauneja02-600x450
வவுனியா குட்செட் வீதியில் கைக்குண்டு ஒன்றுடன் சேர்த்து தேசிய அடையாள அட்டை ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவற்றை இன்று சனிக்கிழமை காலை கைப்பற்றியதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா குட்செட் வீதி அமைதி அகத்திற்கு அருகே காணப்படும் சிறிரேலே இளைஞன் அணியின் தலைவரின் இல்லத்திற்கு முன்பாக காணப்படும் மதகிக்கு அருகே சிறிய பையினுள் சந்தேகத்திற்கு கிடமான பொருள் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அந்த சந்தேகத்திற்கு கிடமான பையினை திறந்த பொழுது கைக்குண்டு மற்றும் அடையாள அட்டை ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.