பக்கங்கள்

பக்கங்கள்

22 ஏப்., 2016

சுவிஸில் பிரபல டென்னிஸ் வீரரின் பெயரில் உருவான புதிய வீதி

சுவிட்சர்லாந்துநாட்டில் பிரபல டென்னிஸ் வீரரான ரோஜர் ஃபெடரர் பெயரில் உருவாகியுள்ள புதிய வீதி ஒன்றை அவரேதிறந்து வைத்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

டென்னிஸ் விளையாட்டு வீரரான ரோஜர் ஃபெடரர்தற்போது உலக டென்னிஸ் வீரர்களின்தரவரிசை பட்டியலில் 3-ம் இடம் வகித்துவருகிறார்.
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் ஃபெடரரின் டென்னிஸ் விளையாட்டு சாதனைகளை கெளரவிக்கும் வகையில், அவருடைய பெயரில் ஒருவீதியை உருவாக்குவது என கடந்த 2010ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, பேர்ன் மாகாணத்தில் உள்ளBiel என்ற நகரில் Allee Roger Federer என்ற பெயரில் ஒருபுதிய வீதி ஒன்று உருவாகியுள்ளது.
இந்த வீதியை நேற்று 1,500 பேர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ரோஜர் ஃபெடரர் கலந்துக்கொண்டு தனது கைகளால் ரிப்பன் வெட்டி இதனை திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி குறித்து ரோஜர் ஃபெடரர் பேசியபோது,‘எனது பெயரில் ஒரு வீதி ஒன்று உருவாகி இருப்பது எனக்குமிகவும் உற்சாகமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
இந்த வீதியில் இருந்து எண்ணற்ற டென்னிஸ்வீரர்கள் உருவாகி சுவிட்சர்லாந்து நாட்டிற்குபு கழை சேர்ப்பார்கள்’என உருக்கமாக பேசியுள்ளார்.
ரோஜர் ஃபெடரர் சிறு வயதாக இருந்தபோது, டென்னிஸ் விளையாட்டு பயிற்சிகளை தற்போது புதிதாக உருவாகியுள்ள வீதி பகுதியில் தான் மேற்கொண்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.