பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2016

ரயில் மறியல் போராட்டம்: மாவட்ட எஸ்.பி.யிடம் வைகோ வாக்குவாதம்




விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று விவசாய ச
ங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கு தே.மு.தி.க. - மக்கள் நல கூட்டணி ஆதரவு அளித்துள்ளது.

கோவில்பட்டியில் நடந்து வரும் ரயில் மறியல் போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது ரயில் மறியல் போராட்டத்தை கைவிடுமாறு தூத்துக்கு மாவட்ட காவல்துறை எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வைகோவுக்கம் எஸ்.பி.க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனிடையே விவசாயிகள் ரயில் போராட்டம் நடத்தியபோது, ரயில்வே ஊழியர் ஒருவரை போலீசார் அடித்துவிட்டனர். இதனால் ரயில்வே ஊழியர்கள் ரயிலை இயக்க மறுத்து போராட்டம் நடத்தினர்.