பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2016

சம்பந்தனிடம் தீர்வு வரைபு கையளிக்கும் நிகழ்வு பிற்போடப்பட்டது

வடமாகாண சபையினால் உருவாக்கபட்டுள்ள தீர்வுத்திட்ட யோசனைகள் அடங்கிய வரைவின் பிரதியை, தழிழ் தேசிய கூட்டமைப்பின்
தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கும் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ் பொது நூலகத்தில் இடம்பெறவிருந்தது.
இந்நிலையில் வடமாகாண முதலமைச்சர், சுகவீனம் காரணமாக கொழும்பில் இருந்து பிரயாணம் செய்வது சிரமம் எனக் கருதி நிகழ்ச்சியை பிற்போடுவதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இன்றைய கையளிப்பு நிகழ்வு பிற்போடப்படுவதாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.
அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தீர்வுத் திட்ட யோசனைகள் அடங்கிய வரைவு வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்டு கடந்த 22ம் திகதி சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.