பக்கங்கள்

பக்கங்கள்

23 ஏப்., 2016

ஜெ. இன்று திருச்சியில் பிரச்சாரம்: தயார் நிலையில் இரண்டு ஹெலிகாப்டர்

திருச்சியில் இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெயலலிதா இன்று உரையாற்றுகிறார். 19 தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி அவர் பேசுகிறார். 

கடந்த 9ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து விருத்தாசலம், தருமபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் திருச்சி ஜிகார்னர் மைதாயத்தில் இன்று மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 19 தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி அவர் பேசுகிறார். 

பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து மாலை தனி விமானம் மூலம் திருச்சி செல்கிறார். திருச்சி மைதானத்தில் இருந்து கூட்டம் நடக்கும் ஜிகார்னருக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். ஜெ. வருகைக்காக ஜிகார்னரில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. ஜி.கார்னரில் தயார் நிலையில் இரண்டு ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.