பக்கங்கள்

பக்கங்கள்

19 ஏப்., 2016

எங்கள் கூட்டணிக்கு இனி ஏறுமுகம் தான்: பிரேமலதா விஜயகாந்த்

ஆறு தலைவர்களைக் கொண்ட எங்கள் கூட்டணிக்கு இனி ஏறுமுகம்தான் என திருச்செந்தூரில் பிரேமலதா பேசியுள்ளார்.

திருச்செந்தூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரேமலதா ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்துள்ளார்.
அப்போது பேசிய பிரேமலதா, தமிழ்நாட்டில் இதுவரை அமையாத வெற்றிக் கூட்டணியாக நமது கூட்டணி அமைந்துள்ளது.
சூரசம்ஹாரம் போல எதிரிகளை வீழ்த்தி இந்த தொகுதியை கைப்பற்றி சாதனை படைக்க வேண்டும். பஞ்சபாண்டவர்களாக இருந்த நமது கூட்டணி தற்போது 6 தலைவர்களை கொண்ட ஆறுபடை வீடுபோல ஆறுமுக கூட்டணியாகியுள்ளது.
ஆறுமுகம் என்றாலே ஏறுமுகம் தான். இனி இறங்கு முகம் கிடையாது. இந்த ஏற்றம் இனி தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை படுமோசமாக உள்ளதை பார்க்கும் போது, இந்த ஆட்சியின் நிலையை நினைத்து வேதனையாக இருக்கிறது.
100க்கும், 500க்கும் ஓட்டுப் போட்டால் இன்னும் 100 ஆண்டு ஆனாலும் திருச்செந்தூர் வளர்ச்சி பெறாது என பேசியுள்ளார்.