பக்கங்கள்

பக்கங்கள்

11 ஏப்., 2016

கூட்டு எதிரணியின் மே தின ஊர்வலத்தில் மகிந்த கலந்து கொள்வது உறுதி

கூட்டு எதிரணியினரால் கிருளப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின ஊர்வலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

மகிந்த ராஜபக்ச ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் காலியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின ஊர்வலத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகிய நிலையில், இது குறித்து வினவியபோதே தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், கூட்டு எதிரணியைச் சேர்ந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் காலி மே தின ஊர்வலத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கூட்டு எதிரணியின் மே தின ஊர்வலத்தில் மகிந்த கலந்து கொள்வது உறுதி