பக்கங்கள்

பக்கங்கள்

23 ஏப்., 2016

நவீன தீண்டாமையை கடைபிடிக்கும் ஜெயலலிதா! போட்டு தாக்கும் கனிமொழி

கோவை கிணத்துக்கடவு சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர்குறிச்சி பிராபாகரனை ஆதரித்து, திமுக எம்பி கனிமொழி போத்தனூரில்
பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜெயலலிதாவின் ஆட்சியில் மக்களால் முதல்வரை சந்திக்க முடியவில்லை.
மக்கள் சந்திக்க முடியாதது ஒருபுறம் என்றால், மத்திய அமைச்சர்களாலேயே ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை.
மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகரும், பியூஸ்கோயேலும் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டும் தரவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மான்செஸ்டரான கோவை மாநகரில், தொழில் பிரச்னையால் 30 ஆயிரத்துக்கும் மேலான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. தொழிலாளர்கள் பசி, பட்டினியால் வாடும்சூழல் உருவாகியுள்ளது.
தமிழகம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கியதுதான் ஜெயலலிதாவின் சாதனை. ஏதாவது ஒருதுறையாவது வளர்ச்சி பெற்றதா என்றால் எதுவும்இல்லை.
தமிழகம் பாதுகாப்பு அற்ற மாநிலங்களில் 9-வது இடத்தை பிடித்துள்ளது.
திமுக ஆட்சியில் ரூ. 14 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானத்தை ரூ.36 ஆயிரம் கோடியாக ஆக்கினார் ஜெயலலிதா.
தற்போது படிப்படியாக மதுவிலக்கை குறைப்பேன் என்கிறார். கண்டிப்பாக மதுவிலக்கை அவர் கொண்டு வரமாட்டார். காரணம், அவரால் நடத்தப்படும் மிடாஸ் மது ஆலைக்கு வருமானம்போய்விடுமே.
அ.தி.மு.கஆட்சியில் ரேஷன் பொருட்கள் முறையாக வினியோகிக்கப்படவில்லை. ரேஷன் கார்டே கொடுக்கவில்லை.ரேஷன் கார்டு அடிக்கக் கூட அவர்களுக்கு நேரம் இல்லை, ஸ்டிக்கர் மட்டுமே அடிக்க நேரம் இருந்திருக்கிறது.
பிரசாரத்திலும்கூட நவீன தீண்டாமையை ஜெயலலிதா கடைபிடிக்கிறார். அதனால்தான் வேட்பாளர்களுக்கு, கீழே தனி மேடை அமைத்து அமர வைத்திருக்கிறார்.
நீங்கள் நினைக்கும் ஆட்சி மலர தலைவர் கருணாநிதி ஆட்சிக்கு வரவேண்டும் என