பக்கங்கள்

பக்கங்கள்

26 ஏப்., 2016

பிரான்சிலிருந்து நாடுதிரும்பியவர் விமானத்தினுள் அட்டகாசம்! நீதிமன்றம் அபராதம்

ஸ்ரீலங்கன் விமானமொன்றினுள் குடிபோதையில் பயணிகளுக்கு இடையூறாக நடந்து கொண்ட நபரரொருவருக்கு கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட்
நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
பிரான்சிலிருந்து கட்டுநாயக்க நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையர் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம் செய்துள்ளார்.
அவரது செயற்பாடுகள் காரணமாக ஏனைய பயணிகள் கடும் அசௌகரியத்துக்குள்ளாகினர்.
இந்நிலையில் விமானம் கட்டுநாயக்கவில் தரையிறங்கியதும் விமானி இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
உஸ்வெட்டகெய்யாவ, பரண அம்பலம பிரதேசத்தைச் சேர்ந்த திலக் பிரசன்ன என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு 25 ஆயிரம் ரூபா அபாராதம் விதித்த கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய, அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.