பக்கங்கள்

பக்கங்கள்

9 ஏப்., 2016

சர்வதேச கால்பந்து தரவரிசை: அர்ஜென்டினா அணி முதலிடம்

இங்கிலாந்து 10,சுவிட்சர்லாந்து 14,பிரான்ஸ் 21,ஸ்வீடன் 36,டென்மார்க் 45,இத்தாலி 15,இந்தியா 162,இலங்கை 187.சர்வதேச கால்பந்து அணிகளின்
புதிய தரவரிசை பட்டியலில் அர்ஜென்டினா அணி ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்றில் சிலி மற்றும் பொலிவியாவை வீழ்த்தியதன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக முதலிடத்தில் இருந்த பெல்ஜியம் அணி 2–வது இடத்துக்கு இறங்கியுள்ளது. சிலி 3–வது இடத்திலும், 4 இடங்கள் உயர்ந்த கொலம்பியா 4–வது இடத்திலும், உலக சாம்பியன் ஜெர்மனி 5–வது இடத்திலும், ஸ்பெயின் 6–வது இடத்திலும், பிரேசில் 7–வது இடத்திலும் உள்ளன. உலக கோப்பை தகுதி சுற்றில் அடுத்தடுத்து தோல்வி எதிரொலியாக இந்திய அணி 2 இடங்கள் சரிந்து 162–வது இடம் வகிக்கிறது.