பக்கங்கள்

பக்கங்கள்

17 ஏப்., 2016

மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார்: எடியூரப்பா பேட்டி


கர்நாடக முதல்வர் எடியூரப்பா நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார் என்று எடியூரப்பா கூறியுள்ளார். 

அவர் மேலும்,  மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி அலை வீசியபோதும், தமிழகத்தில் பாஜகவால் பெரிதாக வெற்றியை சுவைக்க முடியவில்லை. ஜெயலலிதாவின் செல்வாக்குதான் இதற்கு காரணம்.

தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜகவை வளர்க்க பாடுபட்டுவருகிறோம். இவ்விரு மாநிலங்களிலும் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பாஜக பெறும். ஜெயலலிதா மீண்டும் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைப்பார். ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளார்.

தமிழர்களிடம் எனக்கு பிடித்ததே, அவர்களிடமுள்ள கடின உழைப்புதான் என்று கூறினார். மேலும்  தமிழகத்தில் பாஜக வளர்ந்து வரும் கட்சி. அங்கு கணிசமாக வாக்குகளை பெற முயலுவோம். ஒரு இடத்திலாவது பாஜக வெல்லும் என்ற நம்பிக்கையுள்ளது என்று கூறியுள்ளார்.