பக்கங்கள்

பக்கங்கள்

7 ஏப்., 2016

ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர் வீரலட்சுமி

ஜெயலலிதாவை எதிர்த்து தேமுதிக மக்கள் நலக் கூட்டனி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வீரலட்சுமி களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்தை திடீரென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துள்ளார்.
அப்போது, அவருடன் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் , தமிழ் புலிகள் இயக்கத்தின் தலைவர் நாகை. திருவள்ளுவனும் விஜயகாந்த்தை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய வைகோ, மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் வீரலட்சுமி போட்டியிடுவார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட உள்ள முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து வீரலட்சுமி களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதுவரை தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியில் தொகுதிகள் இறுதியாகாத நிலையில் வரும் 10 ஆம் திகதி நடைபெற உள்ள மாநாட்டில் அறிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.