பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2016

பீட்டர் அல்போன்ஸ்-விசுவநாதன் நாளை காங்கிரசில் சேருகிறார்கள்



த.மா.கா.வில் இருந்து விலகிய பீட்டர் அல்போன்ஸ்-விசுவநாதன் நாளை காங்கிரசில் சேருகிறார்கள்

த.மா.கா. மக்கள் நலக் கூட்டணியில் சேர முடிவு செய்ததற்கு அந்த கட்சியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். 

வேலூர் கிழக்கு மாவட்ட த.மா.கா. தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முனிரத்தினம் ஏராளமான தொண்டர்களுடன் நேற்று காங்கிரசில் இணைந்தார். 

த.மா.கா. மூத்த தலைவர் பீட்டல் அல்போன்ஸ், முன்னாள் எம்.பி. விசுவநாதன், தென் சென்னை மாவட்ட தலைவர் இல.பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் த.மா.காவில் இருந்து விலகி விட்டனர். 

ஓரிரு நாளில் அவர்கள் காங்கிரசில் இணைவார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார். இந்த நிலையில் நாளை (13-ந் தேதி) அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் முகுல் வாஸ்னிக் சென்னை வருகிறார். அவரது முன்னிலையில் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் நிர்வாகிகள் காங்கிரசில் இணைகிறார்கள். இதற்கான விழா சத்யமூர்த்தி பவனில் இளங்கோவன் தலைமையில் நாளை நடைபெறுகிறது.