பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2016

ஜீ.எல். பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத்துறையினர் வாக்குமூலம் பெறவுள்ளனர்

முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸிடம் நாளை முற்பகல் 10 மணிக்கு குற்றப்புலனாய்வுத்துறையினர் வாக்குமூலத்தை பெறவுள்ளனர்.
 
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது
குறித்த வெடிப்பொருட்கள் வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படலாம் என்று வதந்தி பரவியுள்ளதாக பீரிஸ் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் நாளை மேற்கொள்ளவுள்ள வாக்குமூலம் தொடர்பில் கருத்துரைத்துள்ள பீரிஸ், அரசாங்கம் அனைத்தையும் அரசியல் ரீதியாக பார்க்கிறது என்று தெரிவித்துள்ளார்.