பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2016

எட்டு வாகனங்களைத் தொடர்ச்சியாக மோதித்தள்ளிய பேருந்து

அவிசாவளையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று எட்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு லொறிகள், கார், முச்சக்கர வண்டி மற்றும் வேன் உள்ளிட்ட எட்டு வாகனங்களுடன் தொடர்ச்சியாக மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.இதன் காரணமாக கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.