பக்கங்கள்

பக்கங்கள்

15 ஏப்., 2016

திருநங்கைகள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: குஷ்பு மீது வழக்குப்பதிவு

திருநங்கைகள் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு சமீபத்தில் ஒரு பேட்டியில் திருநங்கைகள் அரசியலில் ஈடுபடுவது குறித்து சில கருத்துகளை கூறியிருந்தார். இந்த கருத்து திருநங்கைகள் மனதை புண்படுத்தியதாகக் கூறி பலர் எதிர் கருத்துகளை பதிவு செய்தனர்.
இந்நிலையில் குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என பாரதி கண்ணமா என்ற திருநங்கை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சபீனா, விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.