பக்கங்கள்

பக்கங்கள்

29 ஏப்., 2016

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும்- பொருளியலாளர் குழு வலியுறுத்து

இங்கிலாந்தில் உள்ள எட்டு செல்வாக்கான பொருளியலாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும்
என்பதற்கு ஆதரவளித்துள்ளனர்.பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறி 10 ஆண்டுகளின் பின்னர் இங்கிலாந்தின் பொருளாதாரம் 04 சதவீதத்தால் அதிகரிக்கும் என மேற்குறித்த பொருளியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமன்றி பிரித்தானியாவில் விற்கப்படும் பொருட்களின் விலை 08 சதவீதத்தால் குறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.குறித்த பொருளியலாளர்கள் குழுவானது ஐரோப்பிய ஒன்றியத்துடன் உலக வர்த்தக ஒப்பந்தம்  ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.