பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2016

நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படும் சாத்தியம்

ஸ்ரீலங்காவில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறை வட்டாரத் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு மிக முக்கியமான விசாரணைகள் தொடர்பில் நாமல் கைது செய்யப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
நிதிச் சலவையில் ஈடுபட்டதாக நாமல் ராஜபக்ஸ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்தும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பில் நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக வலுவான சாட்சியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதிச் சலவையில் ஈடுபட்டதாக நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக ஊழல்களுக்கு எதிரான குரல் அமைப்பும் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.