பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2016

பேரறிவாளன் வைத்தியசாலையில் அனுமதி!


வேலூர் சிறையில் இருக்கும் ராஜீவ் கொலை குற்றவாளியான பேரறிவாளன்,சிறுநீரகம், எலும்பு தேய்மான கோளாறு காரணமாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில்,கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருக்கும் பேரறிவாளன், உடல்நலக் குறைவு காரணமாக அவ்வப்போது அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சிறுநீரகம் மற்றும் எலும்பு தேய்மான பிரச்சனை காரணமாக அடுக்கபாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பேரறிவாளன் சுகயீனமுற்றுள்ளமை அவர்களது விடுதலைக்காக ஏங்கும் மக்களுக்கு கவலையளித்துள்ளது.