பக்கங்கள்

பக்கங்கள்

15 மே, 2016

எதிர்வரும் 21ம் திகதிக்கு பின்னர் அமைச்சரவை மாற்றம்

இலங்கையில் அமைச்சரவை மாற்றம் ஒன்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் மே 21ம் திகதிக்கு பின்னர் இந்த மாற்றம் எதிர்ப்பார்
க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்று நாடு திரும்பியவுடன் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செய்திச்சேவை ஒன்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவை வினவிய போது, இந்த செய்தியை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்
அமைச்சரவை மாற்றம் குறித்து தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.