பக்கங்கள்

பக்கங்கள்

14 மே, 2016

250 மது பாட்டில் பறிமுதல்

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டும் உள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் வராமல் தடுக்க வேண்டும் என்பதற்காக இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை பூட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
அதனால் தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.


இந்த நிலையில் இன்று அதிகாலை கறம்பக்குடி அருகில் உள்ள  வாழைகொல்லையில் மது விற்கபடுவதாக வந்த தகவ லின் படி கறம்பக்குடி போலிஸார் சோதனையில் 250 மது பாட்டில்கள் கைப்பற்றபட்டன.