பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2016

காங்கேசன்துறைக்கு வடக்கே 600KM தொலைவில் இருந்து வரும் சூறாவளி! இன்று தாக்கும் அபாயம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில் 600 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள
குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ள இந்த சூறாவளிக்கு 'ரோனு" என பெயரிடப்பட்டுள்ளது.
இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன.
இதேவேளை, மழை பெய்யும் பிரதேசங்களிலும் கடற்பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக கடலில் பிரயாணம் செய்வோர், மீன்பிடிக்காக கடலுக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அத்திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.