பக்கங்கள்

பக்கங்கள்

5 மே, 2016

மக்கள் அதிகாரம் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் -மதுராவயல் பதற்றம்


மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இன்று காலை 11.30 மணி அளவில் மூடப் போவதாக மக்கள் அதிகாரம் அமைப்பினர், அப்பகுதி டாஸ்மாக் எதிர்ப்பு குழுவினர் மற்றும் மக்கள் அறிவித்து இருந்தனர். அதற்கு முன்கூட்டியே, பகுதியில் இருந்த தோழர்கள் மூவரை போலீசு அராஜகமாக அடித்து கைது செய்துள்ளனர். மேலும் டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள ஓம் சக்தி நகர் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அப்பகுதி மக்களை யாரும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்றும் போராடக் கூடாது என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் மதுரவாயல் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.