பக்கங்கள்

பக்கங்கள்

10 மே, 2016

சந்திரிக்கா பங்கேற்கும் ஐ.நா பொதுச்சபை விஷேட அமர்வு இன்று ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க தலைவர்களின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
ஐ.நா பொதுச்சபை விஷேட அமர்வில் உரையாற்றவுள்ளார்.
இந்த விஷேட அமர்வு இன்றும் நாளையும் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ளது.
இதன் தொனிப்பொருள் சர்வதேச பாதுகாப்பும் சமாதானமும் என்பதாகும்.
இதன்போது இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்க நடைமுறை பற்றி அவர் உரையாற்றவுள்ளார்.
புதிய தொடர்புகள் மற்றும் பதிலளிப்புக்களுக்கூடாக முன்னோடியான தலைமைத்துவம் என்பது இந்த விசேட அமர்வின் தொனிப்பொருளாகும்.
ஐ.நா பொதுச்சபையின் தலைவர் விஷேட அமர்வை ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் ஐ.நா இணை நிறுவனங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள்