பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2016

வெள்ளவத்தையில் பலியான தமிழ் காதல் ஜோடிகள் தொடர்பாக புதிய தகவல்

வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அருகில் நேற்று புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த இளைஞர் மற்றும் யுவதியும்
தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாத்தறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே நேற்று இவர்கள் மோதுண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
புகையிரதம் வரும் தண்டவாளத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் இவர்கள் இருவரும் தண்டவாளம் நடுவில் வந்து நின்றுள்ளதாகவும், தற்கொலை செய்து கொள்வதற்கே அவர்கள் அங்கு வந்துள்ளதாகவும் புகையிரத சாரதி தெரிவித்துள்ளார்.
பின்னர் புகையிரதத்தை நிறுத்த நேரமின்மையால் அவர்கள் இருவரும் மோதுண்டாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள், 24 வயதான இளைஞர் மற்றும் 25 வயதான யுவதியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், இதற்கு அவர்களின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.love