பக்கங்கள்

பக்கங்கள்

21 மே, 2016

தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவாயில் மூடல்

நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவாயில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், அதிவேக வீதியின் கடவத்தை மற்றும் கொட்டாவைக்கு இடையில் கட்டணம் செலுத்தாமல் பயணிக்க முடியும் என அதிவேக வீதியின் மேற்பார்வை மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஒபநாயக்க தெரிவித்துள்ளார்.
கடுவலை, ஹங்வெல்ல, பியகம பாதைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளமையே நுழைவாயில் மூடப்பட்டமைக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக, வாகன சாரதிகள் தங்களால் கட்டுப்படுத்தக் கூடிய அளவில் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.