பக்கங்கள்

பக்கங்கள்

10 மே, 2016

நாமல் ராஜபக்ஸ இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்றைய தினம் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி
ஆணைக்குழுவில்  ஆஜராகவுள்ளார்.
2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள், துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தவே நாமல் ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
நாமல் ராஜபக்ஸ விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களைப் பயன்படுத்தி மேற்கொண்ட பயணங்களுக்காக கட்டணம் எதனையும் செலுத்தவில்லை என குறிப்பிடப்படுகிறது.
இந்த நடவடிக்கையினால் 50 மில்லியன் ரூபா இலங்கை விமானப்படைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது