பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2016

கைதான பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுவிப்பு

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று (வியாழக்கிழமை) காலை கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பஷில்
ராஜபக்ஷ, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
50,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறு, மாத்தறை நீதவான் யுரேஷா டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.