பக்கங்கள்

பக்கங்கள்

13 மே, 2016

கவுசல்யா தற்கொலை முயற்சி : உடுமலையில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வெட்டிக்கொல்லப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழனியைசேர்ந்த வேறு சாதிப்பெண் கவுசல்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட சங்கர், கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி கவுசல்யாவின் பெற்றோர் அனுப்பிய கூலிப்படையினரால் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார். இதையடுத்து போலீசில் சரணடைந்த கவுசல்யாவின் பெற்றோருக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  சங்கரின் பெற்றோருடன் வசித்து வந்த கவுசல்யா இன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.  உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  

இந்த சம்பவத்தால் உடுமலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பட்டியல்