பக்கங்கள்

பக்கங்கள்

24 மே, 2016

விமல் வெளியில் இருக்க ஏன் குமார் மட்டும் உள்ளிருக்க வேண்டும்? அமைச்சர் டிலான்

முன்னிலை சோசலிஸ கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்ணத்திற்கும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவிற்கும்
ஒரே குற்றச்சாட்டு என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஆயினும், குமார் மாத்திரம் சிறை வாசம் அனுபவித்து வருவதாகவும், விமல் வீரவங்ச வெளியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குமார் குணரட்ணம் தமிழர் என்பதற்காகவா அவர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார் என அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.