பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2016

புகையிரதப்பாதையில் நடந்து சென்ற ஒருவரை புகையிரதம் தூக்கிவீசியதில் உயிரிழந்தார்.

பரந்தன் பகுதியில்  நேற்றைய தினம்  தாயாருடன் தொலைபேசியில் உரையாடியவாறு புகையிரதப்பாதையில் நடந்து சென்ற ஒருவரை
பின்னால் சென்ற புகையிரதம் தூக்கிவீசியதில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் புவனேஸ்வரன் – தனுசன் , வயது 24 என்னும் கிளிநொச்சி வட்டக்கச்சியை சொந்த இடமாகவும்  வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
பரந்தன் பகுதியில்  புகையிரத நிலையத்திற்கு அண்மையில் கரைச்சி வடக்கு ப.நோ.கூ.சங்கத்திற்கு பின் திசையில் நேற்று மாலை சுமார் 2.30 மணியளவில் வவுனியாவில் உள்ள தாயாருடன் தொலைபேசியில் உரையாடியவாறு புகையிரதப்பாதையில் நடந்து பயணித்துள்ளார்.
இவ்வாறு தொலைபேசி உரையாடியவாறு புகையிரதப் பாதையில் பயணித்த குறித்த இளைஞனுக்கு கேட்கும் சக்தி குறைவு என்பதனால் தொலைபேசியில் இருந்து வெளி இணைப்பு வயரினை காதில் மாட்டியவாறு உரையாடி உள்ளார்.
குறித்த விபத்து இடம்பெறுகின்ற நேரம் வரையில் தாயாருடன் உரையாடிச்  சென்றதன் காரணத்தினால் புகையிரத ஒலி உள்ளிட்ட அனைத்தையும் தொலைபேசி வழியாக கேட்டுனர்ந்த தயார் நிலமையின் விபரீத்த்தினை உனர்ந்து உடனடியாகவே கிளிநொச்சிக்கு வருகை தந்தார்.
மேற்குறித்த விபத்து தொடர்பில் கிளிநொச்சிப் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதோடு உடற் கூற்றுப்பரிசோதனைக்காக உடலம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.