பக்கங்கள்

பக்கங்கள்

21 மே, 2016

மாநிலங்களவை தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தார் கலைஞர்


தமிழகத்தில் மாநிலங்களவைக்கான ஆறு இடங்கள் காலியாகவுள்ளன. கே.பி.ராமலிங்கம் (திமுக), ஏ.நவநீதகிருஷ்ணன் (அதிமுக), எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), பால் மனோஜ் பாண்டியன் (அதிமுக), வில்லியம் ரபி பெர்னார்ட் (அதிமுக) ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து அந்தப் பதவிகளுக்கு தேர்தல் ஜூன் 11-ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், திமுக தலைவர் கலைஞர் சென்னையில் செய்திளாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கேள்வி: மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 24ஆம் தேதி முதல் தொடங்குகிறதே? தி.மு.கழகத்தின் சார்பில் யார் போட்டியிடுகிறார்கள்?

பதில்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களாக கழக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, கழகச் செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அறிவிக்கப்படுகிறார்கள்.

கேள்வி: தொ.மு.ச. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்போவதாகக் கூறப்பட்டதே?

பதில்: அடுத்து வரும் வாய்ப்புகளில் தி.மு.கழகத் தொழிற் சங்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.