பக்கங்கள்

பக்கங்கள்

5 மே, 2016

ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவசங்கள் : அதிமுக தேர்தல் அறிக்கை?



தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் களத்தில் இருக்கும் திமுக, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாகா, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன.  ஆனால், தமிழகத்தை ஆளும் அதிமுக இன்னும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவர், இடைப்பாடி தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு தேவையான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஜெயலலிதா கொடுத்து விட்டார். இன்னும் என்ன தேவை இருக்கிறது. குளிர்சாதனப் பெட்டி, வாஷிங்மிஷின் போன்றவை தான்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவசங்கள் அறிவிக்கப்படலாம் என்றார்.

இலவசங்களை வழங்க மாட்டோம் என பெரும்பாலான அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.