பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2016

சில மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை!

நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 7 மாவட்டங்களுக்குமான அறிவிப்பு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கண்டி, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல், நுவரெலியா, மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் மக்கள் வாழும் பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயகரமான இடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கட்டிட ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24 மணிநேரத்தில் தொடர்ந்து மழை பெய்தால் குறித்த பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்று அந்தத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது