பக்கங்கள்

பக்கங்கள்

14 மே, 2016

முறிகண்டியில் பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு, முறிகண்டி வசந்தநகர் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிணற்றில் பெண்ணின் சடலமொன்று காணப்படுவதாக நேற்றிரவு கிடைத்த தகவலையடுத்து, மாங்குளம் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
வசந்தநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவிலுள்ள பாழடைந்த கிணற்றிலேயே சடலம் காணப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.
பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.