பக்கங்கள்

பக்கங்கள்

7 மே, 2016

முதன் முதலாக லண்டன் நகர மேயராக வெற்றிப் பெற்ற புலம்பெயர்ந்த இஸ்லாமியர்

பிரித்தானிய தலைநகரான லண்டனுக்கு முதன் முதலாக தொழிலாளர் கட்சியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றதேர்தலுக்கு பிறகு நேற்று நடைபெற்ற லண்டன் நகர மேயர் தேர்தல் மிகவும் பரபரப்பாக தொடங்கியுள் ளது.
ஸ்கொட்லாந்தில் ஆளும்கட்சியான கன்சர்வேட்டினர் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியினரை தோல்வியடை செய்தனர்.
இதேபோல்,லண்டன் நகர தேர்தலிலும் கன்சர்வேட்டிவ் கட்சி மேயர் வேட்பாளரான Zac Goldsmith என்பவர் வெற்றிபெறுவார் என பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவி வந்துள்ளது.
ஆனால்,இந்த எதிர்ப்பார்ப்புகளை தவிடு பொடியாக்கி தொழிலாளர்கட்சியை சேர்ந்த ஷாதிக் கான் என்பவர் 1,310,143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஷாதிக்கானிற்கு எதிராக போட்டியிட்ட ஷாக்கோல்டுஸ்மித் 9,94,614 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
ஷாதிக்கான் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து பிரித்தானிய வரலாற்றிலேயே லண்டன் நகரத்திற்கு ஒருஇஸ்லாமியர் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுஇ துவே முதல் முறையாகும்.


பாகிஸ்தான் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து லண்டனில் குடியேறிய பெற்றோருக்கு பிறந்த 8 பிள்ளைகளில் ஷாதிக் கானும் ஒருவர். தந்தை லண்டனில் ஒரு வாகன ஓட்டுனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.