பக்கங்கள்

பக்கங்கள்

30 மே, 2016

சிறிதரனின் தந்தையார் சின்னத்துரைஇறுதிக் கிரியைகள் அவரது சொந்த இடமான வட்டக்கச்சியில் இன்று இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் 25.05.2016 அன்று இயற்கை எய்தினார்.

சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் தனது 78ஆவது வயதில் காலஞ்சென்றார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் அவரது சொந்த இடமான வட்டக்கச்சியில் இன்று இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களுடைய தந்தையாரின் இறுதிக் கிரியைகளின் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், சரவணபவன், வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மாவை சேனாதிராஜா என பல தமிழ் அரசியல்வாதிகளோடு பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.