பக்கங்கள்

பக்கங்கள்

1 மே, 2016

சுவிஸ் நாட்டில் நடைபெற்ற தமிழ்மக்களின் மே தினம்

சுவிஸ் - சூரிச் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினம் மிகவும் எழுச்சியுடன்
நடைபெற்றுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினமான இன்று உலகளாவிய ரீதியில் அதனை மக்கள் வெகு விமர்சையாக முன்னெடுத்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில், சுவிஸில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்துடனும், பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறும் தமது ஊர்வலத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.
கொட்டும் மழையிலும் மக்கள் இந்த பேரணியில் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.