பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2016

அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. ஜெயலலிதா 23-ந்தேதி
மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
இதற்கு முன்பாக, அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு, கட்சியின் சட்டமன்ற தலைவராக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். அதனை தொடர்ந்து அவர் அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை கவர்னர் ரோசய்யாவிடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோருகின்றனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.