பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2016

வீரத் தமிழன் விலை போய்விட்டான்: கொந்தளித்த சீமான்

தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு தலைவர்கள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் சீமானிடம் இருந்து
இதுவரையில் எந்தப் பதிலும் வரவில்லை.
‘அடுத்த தேர்தல் நமக்கானது’ என ஆதரவாளர்களை தேற்றிக் கொண்டிருக்கிறார் சீமான்.
சட்டசபை தேர்தல் முடிவுகளை, தனது ஆலப்பாக்கம் வீட்டில் இருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார் சீமான்.
பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஐந்தாவது இடம், ஆறாவது இடம் என நிலவரம் போய்க் கொண்டிருக்க, கலவரத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார்.
ஒருகட்டத்தில், ‘ பல தொகுதிகளில் இரண்டாவது இடம் வருவோம் என எதிர்பார்த்தேன். மக்கள் ஏமாற்றிவிட்டார்கள்’ என நொந்து போனார்.