பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூன், 2016

​7 பேரின் விடுதலைக்காக நாளை மறுநாள் பேரணி – அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார்
என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை அற்புதம்மாள் இன்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேரின் விடுதலைக்காக நாளை மறுநாள் வேலூர் முதல் சென்னை கோட்டை வரை நடைபெறவுள்ள மோட்டார் வாகன பேரணிக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருவதாகக் கூறினார். இந்த பேரணியில் கலந்து கொள்ளுமாறு அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளதாகவும் அற்புதம்மாள் கூறினார். மேலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்தார்.