பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூன், 2016

அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் தலைமைக்கழக பேச்சாளரான ஆவடி குமாரின் பெயர் விடுபட்டுவிட்டது. 'கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் சிலர் செய்த உள்ளடி வேலைதான் இதற்கு காரணம்' என்கின்றனர் தலைமைக்கழக வட்டாரத்தில். தொலைக்காட்சி விவாதங்களில், அ.தி.மு.க சார்பில் பங்கேற்கும் ஆவடி குமாரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கட்சியின் சோதனையான காலகட்டங்களில்கூட, சோர்ந்துவிடாமல் கட்சியின் கருத்துக்களை வலுவாக முன்வைத்து பேசுவார். விவாதங்களில் எந்த அதிரடியையும் காட்டாமல், கட்சியின் கொள்கைகளை நிதானமாக விளக்குவதில் வல்லவர். இந்நிலையில் சமீபத்தில் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. பொன்னையன், நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி, மாஃபா.பாண்டியராஜன், கௌரிசங்கர் என நீண்டு கொண்டே போன பட்டியலில், ஆவடி குமாரின் பெயர் இடம்பெறவில்லை. தலைமையின் முடிவை ஏற்றுக் கொண்டு, 'தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெற விரும்பவில்லை' எனத் தெரிவித்துவிட்டார் ஆவடி குமார். இதுகுறித்துப் பேசிய ஆவடி நகர அ.தி.முக நிர்வாகி ஒருவர், " ஆட்சி அதிகாரத்தில் கட்சி இருந்தாலும், எந்த அமைச்சரிடமும் எதற்காகவும் ஆவடி குமார் போக மாட்டார். கடந்த ஆட்சியின்போது, ஊடகங்கள் ஆவடியாருக்குக் கொடுத்த அதீத முக்கியத்துவத்தால், அதிர்ந்து போனார் தலைமைக் கழக பேச்சாளர் ஒருவர். அவர்தான், கார்டன் நிர்வாகிகளிடம் சொல்லி ஆவடி குமாரை டி.வி விவாதங்களில் பங்கெடுக்கவிடாமல் தடுத்தார். ஒருகட்டத்தில், அந்தப் பிரமுகர் மீது கட்சித் தலைமை கோபம் கொள்ள, தொலைக்காட்சி விவாதங்களில் வழக்கம் போல வலம் வந்தார் ஆவடி. இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ் 'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை? ஆளுநரின் பிரதிநிதியாக நியமிக்கப்படுகிறவர் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். தவிர, செனட் சார்பாக ஒரு பிரதிநிதியும், சிண்டிகேட் சார்பாக ஒரு பிரதிநிதியும் தேர்வு செய்யப்படுகிறார். இதில், செனட் சார்பில் தேர்வாகும் பிரதிநிதி அரசியல் கலப்பில்லாத கல்வியாளராக இருக்கிறார். மற்ற இரு பிரதிநிதிகளும் அரசுக்கு வேண்டப்பட்டவர்களாக உள்ளனர். இதனால், யார் துணைவேந்தர் பதவிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியுள்ளவர்களாக இவர்கள் இருக்கின்றனர். இதுதான் நடக்கப் போகும் ஊழல்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைகிறது. tamilnadu, admk, universitiesIs Vice chancellor post on Auction for Rs. 8 crores? | 'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை? - VIKATAN இப்போது புதிதாக நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் குமாரின் பெயர் இடம் பெறாமல் போனதற்கும் அவரும், டி.வி விவாதங்களில் பங்கெடுக்கும் இன்னொரு நட்சத்திர முகமும்தான் காரணம். மற்றவர்களைப் போல கட்சியை வைத்துக் கொண்டு சம்பாதிக்கும் எண்ணம் ஆவடியாருக்கு இருந்ததில்லை. அம்மா மீது மட்டும்தான் அவர் தீவிர விசுவாசம் காட்டுகிறார். அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் சிலர் தடுப்பதற்கும் இதுதான் காரணம். இதுகுறித்து அம்மாவின் கவனத்திற்கு விரிவான கடிதம் எழுத இருக்கிறார்" என்றார் விரிவாக. அ.தி.மு.க பொதுச் செயலாளர் குறித்து சர்ச்சைக்குரிய தலைப்புகளில் தொலைக்காட்சிகளில் விவாதம் நடக்கு

.தி.மு.கவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் தலைமைக்கழக பேச்சாளரான ஆவடி குமாரின்
பெயர் விடுபட்டுவிட்டது. 'கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் சிலர் செய்த உள்ளடி வேலைதான் இதற்கு காரணம்' என்கின்றனர் தலைமைக்கழக வட்டாரத்தில். 

தொலைக்காட்சி விவாதங்களில், அ.தி.மு.க சார்பில் பங்கேற்கும் ஆவடி குமாரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கட்சியின் சோதனையான காலகட்டங்களில்கூட, சோர்ந்துவிடாமல் கட்சியின் கருத்துக்களை வலுவாக முன்வைத்து  பேசுவார். விவாதங்களில் எந்த அதிரடியையும் காட்டாமல், கட்சியின் கொள்கைகளை நிதானமாக விளக்குவதில் வல்லவர்.
இந்நிலையில் சமீபத்தில் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. பொன்னையன், நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி, மாஃபா.பாண்டியராஜன், கௌரிசங்கர் என நீண்டு கொண்டே போன பட்டியலில், ஆவடி குமாரின் பெயர் இடம்பெறவில்லை. தலைமையின் முடிவை ஏற்றுக் கொண்டு, 'தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெற விரும்பவில்லை' எனத் தெரிவித்துவிட்டார் ஆவடி குமார். 

இதுகுறித்துப் பேசிய ஆவடி நகர அ.தி.முக நிர்வாகி ஒருவர், " ஆட்சி அதிகாரத்தில் கட்சி இருந்தாலும், எந்த அமைச்சரிடமும் எதற்காகவும் ஆவடி குமார் போக மாட்டார். கடந்த ஆட்சியின்போது, ஊடகங்கள் ஆவடியாருக்குக் கொடுத்த அதீத முக்கியத்துவத்தால், அதிர்ந்து போனார் தலைமைக் கழக பேச்சாளர் ஒருவர். அவர்தான், கார்டன் நிர்வாகிகளிடம் சொல்லி ஆவடி குமாரை டி.வி விவாதங்களில் பங்கெடுக்கவிடாமல் தடுத்தார். ஒருகட்டத்தில், அந்தப் பிரமுகர் மீது கட்சித் தலைமை கோபம் கொள்ள, தொலைக்காட்சி விவாதங்களில் வழக்கம் போல வலம் வந்தார் ஆவடி.
 புதிதாக நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் குமாரின் பெயர் இடம் பெறாமல் போனதற்கும் அவரும், டி.வி விவாதங்களில் பங்கெடுக்கும் இன்னொரு நட்சத்திர முகமும்தான் காரணம். மற்றவர்களைப் போல கட்சியை வைத்துக் கொண்டு சம்பாதிக்கும் எண்ணம் ஆவடியாருக்கு இருந்ததில்லை. அம்மா மீது மட்டும்தான் அவர் தீவிர விசுவாசம் காட்டுகிறார். அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் சிலர் தடுப்பதற்கும் இதுதான் காரணம். இதுகுறித்து அம்மாவின் கவனத்திற்கு விரிவான கடிதம் எழுத இருக்கிறார்" என்றார் விரிவாக. 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் குறித்து சர்ச்சைக்குரிய தலைப்புகளில் தொலைக்காட்சிகளில் விவாதம் நடக்கு