பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2016

வட மாகாண வல்லவன் தொடர்: சுப்பர் 8இல் நாவாந்துறை சென். மேரிஸ்

article_1467083750-In26gnauihydKazuku--W
பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், தனது மைதானத்தில் நடாத்தி வரும் இவ்வருடத்துக்கான வட
மாகாண வல்லவன் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு முதலாவது அணியாக நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது.
article_1467083800-Amnloosupep8Kazuku--L
நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் வதிரி மனோகரா விளையாட்டுக் கழகத்துக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற நான்காவது சுற்றுப் போட்டியொன்றில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற சென். மேரிஸ், முதலாவது அணியாக சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அவ்வணி சார்பாக, மதிவதனன், அமிட்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
article_1467083830-Senmirsuoo8Kazuku--MO
போட்டியின் நாயகனாகத் தெரிவான அமிட்டனுக்கான பதக்கத்தினை, பருத்தித்துறை மத்தியஸ்தர் சங்கத்தின் கமல் அணிவித்திருந்ததோடு, பணப்பரிசினை கழுகுகள் விளையாட்டுக் கழகத்தின் பா.ரவீந்திரன் வழங்கி வைத்திருந்தார்.
article_1467083865-kashrnsjKazuku--1.jpg