பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூன், 2016

ஐ.நா. தீர்மானத்தை முழுமைபெற செய்க

”ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். இதன்போது இலங்கையர் அனைவரதும் அர்த்தபூர்வமான ஈடுபாடு காணப்படவேண்டும்.

இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வு ஜெனிவாவில் நேற்று ஆரம்பமானது. அமர்வின் ஆரம்ப உரையை ஆணையாளர் செயிட் அல்ஹுசைன் நிகழ்த்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“”ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு நிலைமாற்றுக்கால நீதி குறித்த முழுமையான தந்திரோபாயம் அவசியம். இது வெவ்வேறு செயற்பாடுகளை ஒருங்கிணைக்கவும் உரிய முறையில் ஒழுங்குபடுத்தவும் உதவும். இதற்கு அனைவரையும் உள்வாங்குவதும் மற்றும் அனைத்து இலங்கையர்களினதும் அர்த்தபூர்வமான ஈடுபாடும் அவசியம். இந்த அமர்வில் இலங்கை தொடர்பில் வாய்மூல அறிக்கையை சமர்ப்பிப்பேன்.
சர்வதேச மனித உரிமை விழுமியங்களை அனைத்து நாடுகளும் பின்பற்றவேண்டும். அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும். சுயாதீன தேசிய அமைப்புகளும் சிவில் சமூக அமைப்புகளும் தங்கள் கருத்துகளை முன்வைப்பதற்கான சுதந்திரம் வழங்கப்படவேண்டும். கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் போன்றவை மதிக்கப்படவேண்டும்.
இந்த உரிமைகளைஞ்; பயன்படுத்தியதற்காக பலர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்யுமாறு கோருகின்றேன்” என்றார்.