பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூன், 2016

நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் வாகனமொன்றில் வந்த சிலர், நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்றின் மீது இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவத்தில் மரணமடைந்தவரின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நபர் 35 வயதுடையவர் என்றும் ரத்மலான பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும், நான்கு பேரை கொண்ட குழு மூலம் தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ள நபர் ஹெரோயின் சம்பந்தமான வழக்கு தொடர்பாகவே நீதிமன்றத்திற்கு வருகை தந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது.