பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2016

கலப்பு இரட்டையர்: பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்


கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி
சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் 4-6, 6-4, 10-8 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சானியா மிர்சா-குரேஷியாவின் இவான் டோடிக் ஜோடியைத் தோற்கடித்தது.
இதன்மூலம் கலப்பு இரட்டையர் பிரிவில் "கேரியர் கிராண்ட்ஸ்லாம்' பட்டம் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார் பயஸ். இதுதவிர பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகியவற்றில் பட்டம் வென்ற நிலையில், இப்போது பிரெஞ்சு ஓபனில் வாகை சூடியுள்ளது.
42 வயதான பயஸ், கலப்பு இரட்டையர் பிரிவில் வென்ற 10-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது. ஒட்டுமொத்தத்தில் இது அவருடைய 18-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். 
ஹிங்கிஸுக்கு இது 22-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். அதேநேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் அவர் வென்ற 5-ஆவது பட்டம் இது.