பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜூன், 2016

சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி ; யாழ்ப்பாணத்தில் பேரணி

சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விழிப்புணர்வு பேரணி  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணி இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணம்  மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணம்  மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் ஆரம்பமாகியுள்ள  இந்த பேரணி இறுதியாக யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நிறைவடையவுள்ளது.
இந்த பேரணியில் மாணவர்கள், பொது மக்கள், பொலிஸார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

சித்திரவதையினால் பாதிக்கப்ட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் தினமான யூன் 26 ஆம் திகதியை நினைவு கூரும் முகமாக இந்த பேரணி இடம்பெற்று வருகின்றது.